உடலில் தேங்கியுள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி நாள்பட்ட நோய்கள் அகலும். மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை போக்கி நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்.
தூய்மைப்படுத்தும் முத்திரையைச் செய்யும் பொழுது உடலில் உள்ள நச்சுகள் சிறுநீர், மலம் அல்லது வியர்வை மூலமாக வெளியேறும்.
முத்திரைப் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் செய்ய வேண்டிய முதல் முத்திரை தூய்மைப்படுத்தும் முத்திரையாகும். இம்முத்திரையை ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் வரை தினமும் 15 முதல் 45 நிமிடங்களுக்கு பழகி வர வேண்டும். ஒரு வேளைக்கு 15 நிமிடமாக ஒரு நாளில் மூன்று வேளையாகவும் தூய்மைப்படுத்தும் முத்திரையைப் பழகலாம். உடலிலிருக்கும் நச்சுகளை இம்முத்திரையின் மூலம் அகற்றிய பின் பிற முத்திரைகளைத் தேவைக்கேற்பப் பழகலாம்.
தூய்மைப்படுத்தும் முத்திரையைச் செய்வது எப்படி?
முதுகும் கழுத்தும் நேராக இருக்குமாறு அமரவும்.
கை விரல்களை விரிக்கவும்.
கையின் பெருவிரல் நுனியை மோதிர விரலின் அடிப்பகுதியில் இருக்கும் கோட்டின் மீது வைக்கவும்.
மிக லேசான அழுத்தம் தரவும்.
கண்களை மூடிக் கொள்ளவும். மனதை முத்திரை மீது வைக்கவும்.
சீரான சுவாசத்தில் இருக்கவும்.
தூய்மைப்படுத்தும் முத்திரையைச் செய்யும் பொழுது உடலில் உள்ள நச்சுகள் சிறுநீர், மலம் அல்லது வியர்வை மூலமாக வெளியேறும். இதற்கான அறிகுறிகளாக அதிக சிறுநீர் போதல், சிறுநீரின் நிறம் மாறுதல், அதிக மலம் போதல், மலத்தின் தன்மை மற்றும் நிறம் மாறுதல், அதிக வியர்வை வெளியேறுதல் போன்றவை ஏற்படும். சில நாட்களில் இவ்வறிகுறிகள் மறைந்து உடல் நலம் மேம்படுவதை உணர்வீர்கள்.
தூய்மைப்படுத்தும் முத்திரையின் பலன்கள்
உடலில் தேங்கியுள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி நாள்பட்ட நோய்கள் அகலும். மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை போக்கி நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்.