இத்தாலியில் ஆறு பயணிகளுடன் பயணித்த 118 என்ற ஹெலிகொப்டர் 600 அடி மலைப்பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த வாரம் Abruzzo பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஹொட்டல் ஒன்று புதைந்ததில் 12 பேர் பலியாகினர். தற்போது, ஹெலிகொப்டரும் குறித்த பகுதிக்கு அருகிலேயே நொறுங்கி விழுந்து விபத்துகுள்ளாகியுள்ளது.
6 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் அக்விலா மாகாணத்தில் பறந்துக்கொண்டிருந்த போது திடீரென ரோடரிலிருந்து காணாமல் போனது.
இதைக்கண்டு அதிர்சசியடைந்த அதிகாரிகள் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான பகுதியை கண்டறிந்து மீட்புக் குழுவினருடன் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹெலிகொப்டரில் பயணித்த 6 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், ஹொட்டல் பனிச்சரிவு விபத்தில் சிக்கி புதைந்து காணாமல் போன 17 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.