எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிரதேசத்தில் மண் அகழும் இயந்திரம் ஒன்றில் சிக்குண்டு சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்தவர் தடயம்கந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் 12வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடுவன பிரதேசம் நோக்கி கற்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தியொன்றை மேடான பிரதேசத்தில் வைத்து மேற்படி மண் அகழும் இயந்திரம் தள்ளிக்கொண்டிருந்த போது சிறுவன் பார ஊர்தியில் ஏற முற்பட்டுள்ளார்.
அதன்போது, மண் அகழும் இயந்திரத்தின் முன்பக்க சில்லில் சிக்குண்டு சிறுவன் பலத்த காயமடைந்த சிறுவனை எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்கான சேர்க்கப்பட் ட நிமலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மண் அகழும் இயந்திர இயக்குநர் பனாமுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.