நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவரது சொந்த வீடு நிர்மாணிப்பு பணிக்காக மூன்று கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. எனினும் அதற்கான முறையான கணக்கு விபரங்கள் எதுவும் பேணப்படவில்லை.
இந்த நிர்மாணிப்பு குறித்து நிதி மோசடி விசாரணை பிரவினால் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனினும் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க சஷி வீரவன்ச சமர்ப்பிக்க தவறியுள்ளார்.
இந்த நிர்மாணிப்பு தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, சஷி வீரவன்ச விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தார்.
அந்த 3 கோடி ரூபா பணம் எவ்வாறு கிடைத்ததென விசாரணை பிரிவினரிடம் பதில் கூற முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டதாக நிதி மோசடி பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் இந்த விசாரணைக்கான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு விளக்க மறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.