நாம் செய்யும் பெரிய தவறே ஆரோக்கியத்தை மேம்படுத்த செயற்கை முறைகளை பின்பற்றுவது தான். நமது ஆரோக்கியம் சீர்கெட மட்டும் தான் நாம் படைத்த செயற்கை பொருட்கள் காரணியாக இருக்கின்றன. ஆனால், மனிதர்கள் உருவாக்கும் ஆங்கில மருந்துகள் ஒருபோதும் முழு தீர்வை அளிப்பது இல்லை.
எனவே, இயற்கை பொருட்கள் மற்றும் உணவுகள் மூலமாக தீர்வு காண்பது தான் உங்களுக்கான முழு தீர்வை தரும். மேலும், ஏதேனும் உடல்நல பாதிப்பு உண்டானால் தான் ஆரோக்கிய உணவுகளுக்கு மாற வேண்டும் என்றில்லை. உடல்நல சீர்கெடு ஏற்படாமல் இருக்க விரும்பினால் கூட ஆரோக்கிய உணவுகளுக்கு மாறாலாம்…
தேவையான பொருட்கள்:
- பட்டாணி – நூறு கிராம்
- எலுமிச்சை ஜூஸ்
- ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
- பூண்டு – பாதி பல்
- நீர் – தேவையான அளவு.
வைட்டமின் சத்துக்கள்:
வைட்டமின் எ, பி, பி3, பி8, பி9, சி, ஈ, ஜே.
செய்முறை:
பட்டாணி, பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் மற்றும் நீர் ஒன்றாக சேர்த்து மிக்ஸரில் அரைத்துக் கொள்ளவும்.
மேலே புதினா இலைகளை அலங்கார பொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
நண்மைகள்:
இந்த ஸ்மூதியில் ஆன்டி-ஆக்சிடென்ட், ஆன்டி-பெஸ்டிசைட், அன்டி-பயாடிக் போன்றவை இருக்கின்றன. இவை உடலில் இருந்து நச்சுக்களை அளிக்கவும். உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேலோங்க செய்யவும் உதவும். மேலும், இந்த ஸ்மூதி செரிமானம் சரியாக, கல்லீரல், கணையத்தின் செயற்திறன் அதிகரிக்கவும் உதவுகின்றன. இந்த ஸ்மூதி இரத்த அழுத்தம் குறையவும், கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் தடுக்கவும் கூட உதவுகிறது.
குறிப்பு:
இதுப்போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஜூஸ் அல்லது ஸ்மூதி போன்றவற்றை உட்கொள்ளும் போது, துரித உணவுகள், ஆல்கஹால், புகை, போதை போன்ற பழக்கங்களை சுத்தமாக கைவிட வேண்டியது கட்டாயம்.