தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவிமாமல் தடுத்து உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியது பீட்டா என்ற விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பாகும். இந்த நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிறுவனம் திரையுலகில் உள்ள புகழ் பெற்றவர்களுக்கு பொறுப்புகள் கொடுத்து அவர்கள் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக காலூன்றி உள்ளது.
உலக அழகி நடிகை ஐஸ்வர்யாராய் பீட்டா அமைப்பின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டதையடுத்து வட மாநிலங்களில் பீட்டாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதேபோன்று தமிழ்,அலையாளம் மற்றும் தெலுங்கு நடிகர்-நடிகைகளை வைத்து விழாக்கள் ,கருத்தரங்குகள் நடத்தி அவர்களுக்கு விருதுகள் கொடுத்து தென்னிந்தியாவிலும் ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது.
பீட்டா நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர்-நடிகைகளுக்கு பீட்டா என்ற ஆங்கில வாசகம் அடங்கிய டீ சர்ட்களையும் வழங்கி அதன்மூலம் பெரும் விளம்பரத்தை தேடிக் கொண்டது.
தனுஷ் ,திரிஷா உள்ளிட்ட பல நடிகர்-நடிகைகள் இதுபோன்ற விழாக்களில் பங்கேற்று தங்களை பீட்ட ஆதரவாளர்காக காட்டிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் பீட்டாவுக்கு எதிரான போராட்டத்தைக் கண்டு மிரண் போன நடிகை திரிஷா, நான் பீட்டாவில் உறுப்பினர் இல்லை என ஜகா வாங்கிக் கொண்டார்.
தற்போது பீட்டாவிடம் விருது வாங்கியதை அவமானமாக நினைக்கிறேன் என்று தனுஷ் சத்தமில்லாமல் விலகிக்கொண்டார்.
இதனையடுத்து ஒட்டுமொத்த திரையுலகமும் பீட்டாவுக்கு எதிராக வரிந்து கட்டி கண்டனங்களை எழுப்பியது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தின்போது பீட்டாவில் இருக்கும் நடிகர்-நடிகைகள் அதில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் சங்கம் கடுமையாக அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால், எமிஜாக்சன் ஆகியோர் தொடர்ந்து பீட்டாவில் இருந்து வருகின்றனர்.
இவர்கள் உண்ணாவிரதத்திலும் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டனர். இதில் எமிஜாக்சன் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவே இல்லை என்றுத் கூறப்படுகிறது.
இதனிடையே பீட்டாவில் இருக்கும் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் பீட்டாவில் தொடர்ந்தால் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது.