மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக பிரணிதா நடித்துள்ளார். ‘சகுனி’ படத்துப்பிறகு பிரணிதா மீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இதுதவிர ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்திலும் பிரணிதா நடித்து வருகிறார்.
‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தில் ஜெய்யுடன் கருணாகரன், காளி வெங்கட், ராஜேந்திரன், தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எனவே இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த சாயலில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்படத்தை வன்சன் மூவிசின் சான் சுதர்சன் தயாரித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாக உள்ளது. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `சி-3′ படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.