‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் ‘தல 57′ படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் வரை பல்கேரியாவில் நடைபெற்றது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அஜித் சென்னை வந்தார். இந்நிலையில் `தல 57′ படத்தின் அடுத்தகட்ட படிப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கிய நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. குடியரசு தினத்திற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழு தெரிவி்த்துள்ளது. `தல 57’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் விவேக் ஓபராயின் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும், அஜித் விரைவில் இணைய உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘தல 57’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர்.
மேலும் இப்படத்தை ரம்ஜான் வெளியீடாக ஜுன் 23-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.