அதிக பனிமூட்டம் காரணமாக பாதை தெளிவாக தெரியாததால் பாரிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஹப்புத்தளை – வெலிமடை பாதையில் இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் 4 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாதையில் உடைந்து வீழ்ந்திருந்த மரமொன்றில் மோதிய பாரவூர்தியொன்று பாதைக்கு அருகில் இருந்த மின் கம்பங்களில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எனினும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சார சபை, மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கு செயற்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உபட்ட ஷெனோன் பிரதேசத்தில் பெண்ணொருவர் வேனில் மோதி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்துள்ளவர், ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான பெண் என தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.