வயதோ 7 தான். ஆனால் 70 வயதுக்கான முதிர்ச்சியுடன் கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார் சிரியாவைச் சேர்ந்த பானா அல்-அபேட்.
யாருக்கு? அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு!
ஏற்கனவே தமது டிவிட்டர் பதிவுகளுக்காக உலகப் புகழ்பெற்றவர் பானா.
டிரம்ப்புக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிரியாவில் போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைக் காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்படி அவர்களைக் காப்பாற்றுவதற்கு டிரம்ப் நடவடிக்கை எடுத்தால் அவரைத் தம் நண்பராக ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார் பானா.
தற்போது துருக்கியில் தன் குடும்பத்தினருடன் பானா வசித்துவருகிறார்.
அங்கு தாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும், மில்லியன் கணக்கான சிறுவர்கள் இன்னும் சிரியாவில் போராடிவருவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டார்.
சரி…பானாவின் கடிதத்துக்கு டிரம்ப்பின் பதில்? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!