வேலை வாங்கித் தருவதாக இளம் பெண் ஒருவரை தொழிலதிபர் மற்றும் வழக்கறிஞர்கள் சேர்ந்து வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு தெருவைச் சேர்ந்த பெண்ணிடம் தொழிலதிபர் குணசீலன் என்பவர் வேலை வாங்கி தருவதாக கூறி பழகி வந்த நிலையில், அப்பெண்ணை காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.
குறித்த பெண்ணும் குணசீலனின் நடிப்பினை உண்மை என்று நினைத்து அவரிடம் பேசி வந்துள்ளார். இந்நிலையில் தனது பூர்வீக சொத்துக்களை பார்த்து வரலாம்… வருங்கால மனைவி நீதானே… என்று கூறியுள்ளார்.
இதனை நம்பி அவருடன் காரில் சென்ற போது, குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளார். அதனை வாங்கி குடித்த சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார். குணசீலன் திட்டமிட்டு மயக்கமருந்தை குளிர்பானத்தில் கலந்து கொடுத்துள்ளார்.
பெண் மயங்கிய பின்பு தனது நண்பரான வழக்கறிஞர்கள் ஜெபநேசன், குணசேகரன், அஜித் ஆகியோருக்கு போன் செய்து வரவழைத்து, பெண்ணை பம்பு செட்டுக்குள் தூக்கிச்சென்று வன்கொடுமை செய்துள்ளனர்.
திடீரென மயக்கம் தெளிந்த பெண் கதறிய அழுத சத்தம் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததும் 4 பேரும் தப்பித்துள்ளார். அப்பெண்ணை மீட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்பு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தியுள்ளனர். பெண் கொடுத்த வாக்குமூலத்தில் அடிப்படையில் தொழிலதிபர், வழக்கறிஞர்கள் உட்பட நான்கு பேர் மீதும் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதோடு, தீவிரமாக தேடி வருகின்றனர்.