Loading...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தையை பிரசவித்த இளம் தாயொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியை சேர்ந்த 25 வயதான இளம்தாயே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் பிரசவத்திற்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.
Loading...
இதையடுத்து, கொரோனா சிகிச்சை விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். எனினும், நேற்றைய தினமே அவர் உயிரிழந்துள்ளார்.
Loading...