இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் 150 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினை கடத்திச் வந்த பல நாள் படகை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். படகிலிருந்த ஒன்பது ஈரானியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு குறித்த கப்பல் சுற்றிவளைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்புப் பிரிவுக்குப் பொறுப்பான எஸ்எஸ்பி சுதத் மாசிங்கவிடம் கிடைத்த உளவுத்துறையின்படி, சிறப்பு பொலிஸ் குழு மற்றும் கடற்படை நேற்றிரவு (10) ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு மட்டக்களப்பு தெற்கு கடலில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கப்பல் மற்றும் ஹெரோயின் தொகை இலங்கை கடற்பரப்புக்கு கடற்படையால் கொண்டு வரப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.