Loading...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விரைவில் மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்திக் குறிப்பில்,
அண்மைய நாட்களாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் செயற்பாடுகள் குறித்து இவர்கள் அதிருப்தி கண்டுள்ளனர்.
இதனால், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 10 பேர் கட்சித்தாவ தயாராக உள்ளனர்.
Loading...
சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்தில் இருக்கின்ற பெண் உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள் இருவரது ஆலோசனைக்கமைய செயற்படுவதாக கட்சித்தாவ இருக்கும் உறுப்பினர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
இவ்வாறு கட்சித்தாவலுக்குத் தயாராக உள்ளவர்கள் பற்றிய தகவல் அடுத்துவரும் நாட்களில் வெளிவரும் என – குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...