அரசியல்வாதி ஒருவரை அதிலும் அமைச்சுப்பதவி வகித்த ஒருவரை உடனடியாகவே மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பது என்பது மத்திய வங்கிகட்டமைப்பின் சுயாதீனத்தன்மையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஆளுநராக நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த புதிய பிரச்சினை உருவாகியுள்ளது.
இந்நிலையலேயே அவர் இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கியானது அரசிடமிருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதே அதன் கொள்கைகளில் முதன்மையானதாகும்.
ஆனால் இப்போது மத்திய வங்கி அரச திணைக்களமொன்றைப்போல மாறியிருக்கின்றது என்று பலரும் விமர்சிக்கின்றார்கள்.
இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் பொறுப்பிலிருந்து பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷ்மன் விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.