Loading...
வவுனியா மாவட்டத்தில் பரவலாக பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 50 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தன புர பல்கலைகழகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
Loading...
அதன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாவட்டம் தழுவிய ரீதியில் 50பேர் டெல்டா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேரும், செட்டிகுளம் பிரிவில்5 பேரும் ஏனைய பிரிவுகளில் தலா ஐவருமாக 50 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Loading...