இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் விராட் கோலி செய்தும் அதனை இங்கிலாந்து வாரியம் ஏற்காதது தெரியவந்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி போட்டி நேற்று தொடங்கவிருந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக போட்டியானது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் பிசிசிஐ – இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே நீண்ட நேரமாக பரபரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 – 1 என தொடரில் முன்னிலை வகிப்பதால், அவர்கள் தான் வெற்றி என ஒருபுறம் கூற, மற்றொரு புறம், இந்தியா தானாக முன்வந்து வெளியேறுவதால், இங்கிலாந்து தான் வெற்றியாளர்கள் என்றும் விவாதிக்கப்பட்டது.
இறுதியில் இந்த தொடரை முடிவு எட்டப்படாமல் நிறுத்திக்கொள்வதாகவும், கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி வேறு ஒருநாள் திட்டமிட்டு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டியை எப்படியாவது நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதற்காக கேப்டன் விராட் கோலி போராடியிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது அவர் போட்டியை 2 நாட்கள் ஒத்திவைத்துவிட்டு, தாமதமாக கூட நடத்துவதற்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதிக்கவில்லை. போட்டியை நடத்துவது என்றால், தற்போதே நடத்த வேண்டும், இல்லையென்றால் வேறு ஏதாவது ஒருநாளில் நடத்திக்கொள்ளலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தான் டெஸ்ட் போட்டி முடிவின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.