4 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமியை பள்ளியின் தலைமை ஆசிரியர் வகுப்பறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாபூர் கோந்தளமாவ் பகுதியில், 4 ஆம் வகுப்பு பயின்று வரும் 9 வயது மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, பள்ளி வளாகத்தில் ஆட்கள் இல்லாத வகுப்பறைக்கு சிறுமியை தலைமை ஆசிரியர் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து காமுக தலைமை ஆசிரியர் சிறுமிக்கு ஆபாச படங்களை காண்பித்து இருக்கிறான். இதனைக்கண்ட சிறுமி எதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்து, ஆபாச படத்தை பார்க்க மறுத்து அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார்.
இதனால் அறையின் கதவை உள்புறமாக தாழிட்ட காமுக தலைமை ஆசிரியர், சிறுமியை பள்ளி வகுப்பறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறான். இதுகுறித்து யாரிடமும் கூற கூடாது என மிரட்டியும் சென்று இருக்கிறான்.
பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்ற சிறுமி, தனது தந்தையிடம் நடந்தை கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்தனர்.
அவனிடம் நடந்த விசாரணையில் உண்மை உறுதியாகவே, அதிர்ச்சி தகவலாக மேலும் சில மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதும் அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.