டிக் டாக் காதலனை சந்திக்க சென்ற பெண்மணி, காதலன் உட்பட 4 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பயங்கரம் அரங்கேறியுள்ளது. பெண்ணின் உடல்நிலை மோசமானதால், அவர்களே மருத்துவமனையில் அனுமதித்து சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியை சார்ந்த இளம்பெண்ணுக்கு 28 வயது ஆகிறது. இவருக்கு டிக் டாக் செயலி மூலமாக அனஸ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அனஸ் கோழிக்கோடு பகுதியை சார்ந்தவர். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்த நிலையில், பல்வேறு சூழ்நிலை காரணமாக நேரில் சந்திக்க முடியமால் இருந்துள்ளது.
பெண்ணை காதலிப்பது போல ஏமாற்றி வந்த காமுகன் அனஸ், அவரை தனது நண்பர்களும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டு பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான். இந்நிலையில், நாம் நேரில் சந்திக்க வேண்டும் என்று அனஸ் ஆசை வார்த்தை கூற, பெண்மணியும் கொல்லத்தில் இருந்து கோழிக்கோடு புறப்பட்டு சென்றுள்ளார்.
அங்கு இளம்பெண்ணை அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்ற நிலையில், குளிர்பானத்தில் அதிகளவு மதுவை கலந்து கொடுத்துள்ளான். பின்னர், அவர்களின் திட்டப்படி பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்து வைத்து இருக்கின்றனர். இதற்குள்ளாக பெண்ணின் உடல்நிலை மோசமாகவே, இதனால் பயந்துபோன நால்வரும் அங்குள்ள மருத்துவமனைக்கு பெண்ணை கொண்டு சென்று அனுமதி செய்துள்ளனர்.
மருத்துவர்கள் பெண்ணின் நிலையை கண்டு அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார் என்பதை உறுதி செய்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தை புரிந்துகொண்ட அனைவரும் அங்கிருந்து தப்பி செல்ல, மருத்துவர்கள் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர். பின்னர், பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கயவர்களை தேடியுள்ளனர்.
அனஸின் அலைபேசி எண்ணை வைத்து அனஸ் மற்றும் பகத் ஆகிய 2 பேரை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள 2 பேருக்கு வலைவீசியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.