அப்பாவியான 24 வயதான இளைஞன் ஒருவனை கொன்று விட்டு அதனை மறைத்த திருடன் தான் இந்த விமல் என நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இப்போது யோக்கியனைப்போல கருத்து வெளியிடும் விமல் பாராளுமன்றம் முடிந்தவுடன் குளித்துவிட்டு சிறைச்சாலைக்கு சென்று விடுவார்.
சிறையில் இருக்கும் இவர், இங்கே வந்து ஆட்சிக்கு எதிராக ஓர் தேசிய வீரனைப்போல் பேசி வருகின்றார் ஆனால் திருட்டை செய்து விட்டு சிறையில் இருப்பதை மறந்து விட்டார்.
குடும்பம் இப்போது வீதியில் நிற்கின்றது. விமலின் அக்கா ஒருவர் வீதியில் நின்று கொண்டு அண்மையில் கூச்சல் இட்டுள்ளார் அவருக்கும் இவர் வாகனங்களை கொடுத்துள்ளார்.
திருடர்களை வெளியில் விட்டதே தவறு. தேரர்களுக்கும் தனது குடும்பத்திற்கும் வாகனங்களை கொடுத்தார் இப்போது சிறையில் அனுபவிக்கின்றார் எனவும் நலின் தெரிவித்தார்.
இதன்போது கூட்டு எதிர்க் கட்சியினர் அவருடைய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். மாறி மாறி கூச்சல்கள் எழுப்பப்பட்டமையினால் பாராளுமன்றத்தில் அமைதியற்ற சர்ச்சை நிலை ஏற்பட்டது.
சபை அடங்க பின்னர் மீண்டும் தொடர்ந்த நலின்,
தனது இலாபத்திற்காக வாலை ஆட்டிக்கொண்டிருக்கும் நபர்களே இப்போது கூச்சல் போடுகின்றார்கள்.
விமலினால் பாராளுமன்றமே இப்போது கடுமையான நாற்றம் வீசுகின்றது. அது பொறுக்க முடியாமல் அவர் அருகில் இருக்கும் வாசுதேவ, பந்துல போன்றோர் கூட மூக்கை மூடிக்கொண்டுள்ளார்கள்.
கூச்சல் போடுவதை விட்டு விட்டு என்னுடன் நேரடியாக மோதும் முதுகெலும்பு இருக்கின்றதா. வெட்டிப்பேச்சி பேசுபவர்களே நீங்கள். வயாகரா சொந்தக்காரரின் பின்னால் நீங்கள் இருக்கின்றீர்கள்.
24 வயது இளைஞனை வயாகரா கொடுத்து கொன்றவரே விமல் இப்போது கூச்சல் போடுகின்றவர்களுக்கும் காரணம் விமல் கொடுத்துள்ள வயாகராவே.
அந்த வயாகராவின் தாக்கமே இப்போது உங்களை கூச்சலிட செய்கின்றது எனவும் நலின் பண்டார தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.