எந்நேரமும் காதலனுடன் போனில் பேசிக் கொண்டிருந்த அக்காவை தம்பி கொன்ற அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள சர்தானா பகுதியை சேர்ந்தவர் ஷானோ, சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், ஷன்னோ மீரட்டில் உள்ள ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். ஆனால் முந்தைய கணவருக்கு பிறந்த அவரது இரண்டு குழந்தைகள்- சம்ரீன் மற்றும் அரிஷ்- சர்தானாவில் தாத்தாவுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த ஷானோவின் மகள் சம்ரீன், உள்ளூர் நபரை காதலித்து வந்தார். இதுபற்றி அவரது குடும்பத்தினர் அறிந்ததும், அவர்கள் அந்த பெண்ணிடம் அந்த நபரிடமிருக்கும் காதலை கைவிடுமாறு கூறினர்.
ஆனால் சம்ரீன் அவர்களின் ஆலோசனையைப் புறக்கணித்துவிட்டு, அவளுடைய சகோதரனுக்கு கோபத்தை உண்டாக்கும் வகையில் அந்த நபரிடம் தொலைபேசியில் தொடர்ந்து பேசிவந்துள்ளார்.
எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து போனில் பேசியதால் ஆத்திரமத்தை அரிஷ், சம்ரீனை கொலை செய்ய முடிவெடுத்தார்.
இதன்படி அந்த பெண் வீட்டு முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரின் தலையில் சுட்டுக் கொன்றார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிறகு துப்பாக்கி சத்தம் கேட்டு, மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து, சம்ரீன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டனர்.
இதனையடுத்து ஷானோ, அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அரீஷை கைது செய்தனர்.