இந்தியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஆர்எஸ் நகரை சேர்ந்த இளம்பெண்ணுக்கு அதே பகுதியில் வசிக்கும் ராஜ்கிரண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு அவர் அந்த பெண்ணிற்கு நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரச்சொல்லியுள்ளார்.
அந்த பெண்ணும் அவர் சொல்வது உண்மை என்று நம்பி சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு அவர் குளிர்பானம் ஒன்றை குடிக்க சொல்லி கொடுத்துள்ளார்.
அதில் மயக்க மருந்து கலந்து இருப்பது தெரியாமல் அதை வாங்கி இளம்பெண் குடித்துள்ளார். பின்னர் சிறுது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை பயன்படுத்தி கொண்ட ராஜ்கிரண் அவரது 3 நண்பர்களை வரவழைத்து அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.
இதையடுத்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ராஜ்கிரண் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.