Loading...
காத்தான்குடி – ராசா ஆலிம் வீதியில் கடந்த 19 நாட்களுக்கு முன்னர் தீக்காயங்களுக்குள்ளான பெண் ஒருவர் நேற்று (12) காலை சிகிச்சை பலனின்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி ராசா ஆலிம் வீதியில் வசிக்கும் 69 வயதுடைய குறித்த பெண் தனது வீட்டில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது குப்பைகளுக்கு தீ மூட்டி உள்ளார்.
இதன் போது தீ பெண்ணின் ஆடையில் தற் செயலாக தீ பிடிக்கவே தீ பரவல் ஏற்பட்டுள்ளது
Loading...
பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது
இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...