பெண்களிடம் ஏற்படக்கூடிய உளவியல் பிரச்சனைகள் என்பது ஆண்களுக்கு ஏற்படுவதிலிருந்தும் சற்றும் வித்தியாசமானது. ஒரு இளம் பெண்ணுக்கு தன்னுடைய இளம் சகோதரர் மீதே காதல் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பெண் தவறு என்று உணர்ந்தவுடன் உளவியல் நிபுணரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். இது மும்பையில் நடந்த சம்பவம். உளவியல் நிபுணருக்கு எழுதிய கடிதத்தை தற்பொழுது பார்ப்போம்.
நான் செய்வதெல்லாமே தவறு தான். ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னை என்னுடைய மூத்த சகோதரர் மிகவும் கவர்ந்து விட்டார். நானும் அவரை காதலிக்க ஆரம்பித்து விட்டேன்.
எனக்கு 19 வயது. என்னுடைய சகோதரருக்கு 26 வயது. கடந்த 3 வருடமாக காதலித்து வருகின்றேன். நான் அவனோடு பழகும் பொழுதெல்லாம், அவனை என்னுடைய காதலனாகத் தான் உணர்கின்றேன்.
இதிலிருந்து, நான் எப்படி வெளிவருவது. எனக்கு முறையான ஆலோசனைகளை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று அந்த இளம் பெண் உளவியல் நிபுணருக்கு கடிதம் எழுதியுள்ளார். மும்பையில் உள்ள உளவியல் நிபுணர் சங்கனா ஜோஷி அந்தப் பெண்ணுக்கு பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, இது போன்ற சிந்தனைகள் ஒரு சில இளம் பெண்களிடம் ஏற்படுவது இயல்பானது தான். உன்னுடைய பருவம் அடைந்தவுடன், பாலியல் ரீதியான சிந்தனைகளில் இதுவும் ஒன்று தான்.
பொதுவாக, யாரும் அவ்வள சீக்கிரமாக சகோதரனிடம் நெருக்கம் ஏற்படுவது அபூர்வமான ஒன்றுதான். பாலியல் ரீதியான உணர்வுகள் அதிகரிக்கும் பொழுது, இது போன்ற சிந்தனைகள் ஏற்பட்டுவிடும்.
இதை, ஆரம்பத்திலேயே நாம் சீர் செய்தாக வேண்டும். இதை பாதிக்கப்பட்ட நீ முயற்சி செய்தால் தான் தீர்க்க முடியும். அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றது.
அதாவது, உன்னுடைய சகோதரனுடன் அதிகமாக ஈடுபாடு கொள்வதில் இருந்து விலகியிருக்க வேண்டும். உனக்கு ஏற்பட்ட பிரச்சனை சில ஆண்களுக்கும் ஏற்படும்.
அதனால், இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதிலும், உடல்ரீதியான நெருக்கம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். நீ ஒரு பெண் என்பதை உணர்ந்து, இடைவெளி விட்டு பழக வேண்டும்.
ஒரு சகோதரனுக்கு என்னவெல்லாம் ஒரு சகோதரி செய்ய முடியுமோ அதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுது தான் இதுபோன்ற விஷயங்களில் இருந்து வெளிவர முடியும்.
இன்னொன்று, உனக்கு வயது அடைந்துவிட்டால் விரைவாக திருமணம் முடிப்பது நல்லது.