சமூகவலைதளங்களில் உலகளவில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப் நிறுவனமானது அடிக்கடி புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப்பில் வீடியோ காலிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு அது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இன்னொரு புதிய விடயத்தை வாட்ஸ் அப் செயல்படுத்தியுள்ளது. அதாவது, இன்டர்நெட் கவரேஜ் அல்லது சரியாக சிக்னல் இல்லாத இடத்திலிருந்தும் இனி வாட்ஸ் அப்பிலிருந்து மெசேஜ் அனுப்ப முடியும்.
ஒரு இடத்தில் இன்டர்நெட் சிக்னல் சரியாக இல்லை என வைத்து கொள்ளுங்கள்.
அந்த இடத்திலும் நாம் வாட்ஸ் அப்பில் மெசேஜ் டைப் செய்து queue வரிசையில் வைத்து விட வேண்டும். அங்கு இன்டர்நெட் சிக்னல் வந்துவிட்டால் அந்த மேசேஜ் அனுப்பபட்டு விடும்.
திரும்ப மெசேஜை Resend செய்ய Send பட்டனை மட்டும் அழுத்த வேண்டியது இதில் அவசியமாகும்.
தற்போது இந்த வசதியானது ஐபோனில் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.