நியூசிலாந்து நாட்டில் தந்தை மற்றும் மகளுக்கு ஏற்பட்ட தவறான உறவால் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளனர்.
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு 37 வயதான நபர் ஒருவர், தனக்கு 13 வயதாக இருக்கும் போதே தன் 30 வயது வளர்ப்பு தாயுடன் தவறான உறவை வைத்துள்ளார்.
இதன் காரணமாக இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பின்னர் இவர் அந்த குழந்தையை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
பின்னர் தனக்கு 31 வயதாக இருக்கும் போது அவரின் 16 வயது மகளை 2010ஆம் ஆண்டு கண்டுபிடித்து அவருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார் அந்த தந்தை. பின்னர் தந்தை மகளுக்கு இடையே தவறான உறவு ஏற்ப்பட அதன் காரணமாக கடந்த 2012ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
பின்னர் 2013 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு குழந்தை பிறந்து இறந்துள்ளது. தற்போது அந்த நபருக்கு 37 வயதும் அவர் மகளுக்கு 23 வயதும் ஆகிறது.
இந்த தவறான உறவு விடயம் வெளியில் தெரிய, இது வழக்காக மாற்றப்பட்டு நீதிமன்றத்துக்கு முன்னெடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, இப்படியொரு தவறான உறவுமுறை தந்தைக்கும், மகளுக்கும் இடையே ஏற்ப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், இந்த நபர் இரண்டாண்டுக்கு தீவீர கண்காணிப்பில் இருக்க வேண்டும் மற்றும் ஆறு மாதங்களுக்கு சிறையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் அந்த 23 வயதான இளம் பெண் இரண்டாண்டுகள் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.