கொழும்பு, மட்டக்குளிய பகுதி பெண் கிராமசேவகரின் கணவரின் கொலை தொடர்பில் மட்டக்குளிய பகுதியிலுள்ள முகாமொன்றில் கடமையாற்றிய இராணுவப் புலனாய்வு கோப்ரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மர்ம கொலை சம்பவம் தொடர்பில் முகாமின் உயரதிகாரியொருவர் உள்ளிட்ட 7 இராணுவத்தினர் பொலிசாரால் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொல்லப்பட்ட கிராமசேவகரின் கணவரின் மோட்டார் சைக்கிள்கள் பல துண்டுகளாக அறுக்கப்பட்டு களனி ஆற்றில் வீசப்பட்டுள்ளது. அதன் பாகங்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
கைதான கோப்ரலுக்கும், கிராமசேவகருக்குமிடையிலான கள்ளக்காதலின் விளைவாக இந்த கொலை நடந்துள்ளது.
ஓகஸ்ட் 13ஆம் திகதி அவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பொலெரோ ஜீப்பில் வந்ததாகக் கூறப்படும் இராணுவ புலனாய்வுப் பணியாளர்களால் அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
15ஆம் திகதி கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
விசாரணையை ஆரம்பித்த பொலிசார், கொலைக்கான மூல காரணத்தை கண்டறிந்தனர்.
இந்த கொலை தொடர்பாக தற்போது ,ராணுவ முகாமில் உள்ள குழுவினரிடம் இருந்து பொலிசார் தகவல்களை பெற்று வருகின்றனர்.