ஐபிஎல் தொடரில் ஜானி பேர்ஸ்டோவுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி வீரர் ஷெர்பேன் ரூதர்போர்ட் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
14வது ஐபிஎல் தொடரின் 2ம் பகுதி ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19ம் திகதி முதல் அக்டோபர் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஆனால் அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இங்கிலாந்தை சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன், கிறிஸ் வோக்ஸ் ஆகிய மூன்று வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கபோவதில்லை என அறிவித்துள்ளனர்.
இதனால் மாற்று வீரர்களை தேடும் பணிகளில் அணிகள் ஈடுப்பட்டு வருகின்றன. பேர்ஸ்டோ ஹைதராபாத் அணிக்காகவும், மாலன் பஞ்சாப் அணிக்காகவும், வோக்ஸ் டெல்லி அணிக்காகவும் ஒப்பந்தமாகியிருந்தனர்.
இந்நிலையில் ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்றாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த வீரர் ஷெர்பேன் ரூதர்போர்ட்டை சன் ரைசர்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
தற்போதைய சூழலை பொறுத்தவரை ஜானி பேர்ஸ்டோவை விட ஷெர்பேன் நல்ல ஃபார்மில் இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அதிரடியாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.