சுவிட்சர்லாந்து நாட்டில் 7 வயதான மகளுக்கு தாய்ப்பால் கொடுத்த தாயார் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் உள்ள சூரிச் நகரில் 42 வயதான தாயார் ஒருவர் தனது 7 வயதான மகளுடன் வசித்து வருகிறார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய 7 வயது மகளுக்கு தாயார் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்து வருவதாக அவரது கணவர் பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும், வளர்ச்சி அடைந்த மகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அவர் தன்னுடைய பாலியல் உணர்வுகளை அனுபவிப்பதாக தந்தை புகார் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுமியை தாயாரிடம் இருந்து பிரித்த நீதிமன்றம் அவரை தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர்.
நீதிமன்ற விசாரணையின்போது, ஒவ்வொரு நாளும் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயார் மகளுடன் வற்புறித்திய புணர்ச்சியில் ஈடுப்பட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதே சமயம், தந்தையும் தாயும் சேர்ந்து இருந்தபோது இச்செயலுக்கு தந்தையும் அனுமதி அளித்ததாக அவர் மீதும் தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சுவிஸ் குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகையில், ‘குழந்தை பிறந்ததும் 4 முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு ஒரு வயது பூர்த்தியானதும், தாய்ப்பால் தவிர்த்து பிற உணவுகளையே பெற்றோர் அளிக்க வேண்டும்’ என கூறிவருகின்றனர்.
எனவே, 7 வயதான மகளுக்கு தாய்ப்பால் கொடுத்ததன் மூலம் வற்புறித்து புணர்ச்சி கொண்ட தாயாருக்கு நீதிமன்ற விசாரணைக்கு பிறகு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.