பிரேசிலின் றியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் தமிழக வீரரான மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி, தற்போதைய தலைவர் விராட் கோஹ்லி, ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த 21வயதுடைய டி.மாரியப்பன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் 1.89 மீ உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், எந்த வகையான பத்ம விருது என்பது பற்றிய விவரம் அறிவிக்கப்படவில்லை. நாளை நடைபெறும் குடியரசுதின விழாவில் முழு விவரம் வெளியாகும். மிக இளம் வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்ற பெருமையை சிந்து ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு பெற்றமை நினைவுக்கூரத்தக்கது.