தமிழ் மக்களுக்கு எதிரான எந்தவிதமான ஆவணத்திலும் நான் கையெழுத்திடவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமையைப் பெறுவதற்கான செயற்பாடுகளுக்கு தடையாக இருக்காது என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி .சரவணபவன் தெரிவித்துள்ளார் .
இன்று நடந்த ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நான் கூட தமிழ் மக்களுக்கு எதிரான எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து வைக்க தயாரில்லை.
இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தன்மைக்கு மேலும் இறுக்கமான ஒரு செயற்பாடாக தான் ஐ.நா ஆணையாளரின் கருத்தை நான் பார்க்கின்றேன்.இன்னும் முழுமை அடையவில்லை.
இலங்கை அரசாங்கம் மிகவும் சிக்கலான ஒரு நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பது தெளிவாக விளங்குகின்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பால் அனுப்பப்பட்ட ஆவணங்களும் ஐ.நாவில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையில் சில பிழையான விடயங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான எத்தனிப்புகள் நடைபெறுவதாக அறியமுடிகின்றது.
பொதுமக்களாகிய நீங்கள் இந்த விடயங்களில் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.மட்டக்களப்பு மாநகர சபையில் எந்தவிதமான சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு ஊழல் செயற்பாடுகளுக்கு இடம் இல்லை. அவ்வாறு பிழையான வழிகளை நீங்கள் பின்பற்றும் பட்சத்தில் எமக்கு அது தெரியவரும் போது இரண்டு நபர்களுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.
மட்டக்களப்பு மாநகர சபையானது இலங்கையிலும் சரி கிழக்காசியாவிலும் சரி முதலாவது சிறுவர் சினேக நகர அபிவிருத்தி ஏற்பாடானது.மட்டக்களப்பு மாநகர சபை தான் ஆரம்பித்தது இன்று அதனுடைய முதலாவது ஆண்டு பூர்த்தி அடைந்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.