பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், பின்னணிப் பாடகருமான கே.ஜே.யேசுதாஸுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கொச்சியில் பிறந்த யேசுதாஸ், கால்பாடுகள் என்கிற மலையாளப் படத்தில் 1960-ல் முதல்முதலாகப் பாடினார்.
தமிழில் எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில், நீயும் பொம்மை நானும் பொம்மை என்கிற பாடல் மூலம் அறிமுகமானார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்க மாநில அரசுகளின் சிறந்த பாடகருக்கான விருதை 45 முறை பெற்றுள்ள அவர் ஏராளமான ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து ஏழுமுறை தேசிய விருது வாங்கியுள்ள யேசுதாஸ், 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
பல்வேறு துறைகளில் அளப்பரிய சாதனைப் படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், கே.ஜே.யேசுதாஸ் பத்ம விபூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.