இணைய சேவைகளில் கூகுளின் பெரிய பலம் தேடுதல் தளம் (சர்ச் இன்ஜின்). இந்நிலையில், அதிலும் போட்டியிடும் வகையில் களமிறங்கவுள்ளது ஃபேஸ்புக்.
அந்தவகையில், மெட்டா எனும் சர்ச் இன்ஜினை ஆராய்ச்சி பணிகளுக்காக மார்க் சுக்கர்பெர்க், சான்-சுக்கர்பெர்க் கொள்வனவு செய்துள்ளனர்.
இது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் உதவும் என்றும், இணையத்தில் இருக்கும் யாராலும் கண்டு கொள்ளப்படாத, அதேசமயம் தேடல் தொடர்பான தரவுகளை உரிய தருணத்தில் தரும் சர்ச் இன்ஜின் என்றும் கூறப்பட்டுள்ளது.
பேஸ்புக் தற்போது இந்த தேடுதல் தளத்தை ஆராய்ச்சி பணிகளுக்காக மட்டுமே வாங்கியுள்ளது. பிற்காலத்தில் ”கனெக்ட்” என்ற பெயரில் ஃபேஸ்புக் இந்த தேடுதல் தளத்தை மக்கள் சேவைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் கூகுளுக்கு மிகச் சரியான போட்டியாக ஃபேஸ்புக் மாறும் என்பதில் சந்தேகமில்லை.