நாட்டின் மொத்த பொருளாதார பொறிமுறையையும் அனைத்து மக்களினது வாழ்க்கையையும் பாரிய பேரழிவுக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்ற அரசாங்கம் நாளுக்கு நாள் புதிய பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டு அவற்றுக்கு தவறான தீர்வைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மைக்காலத்திற்குள் குறுகிய சிந்தனையுடன் கண்மூடித்தனமாக தீர்மானமொன்றை அரசாங்கம் எடுத்ததினால் இந்த விவசாய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,
- அரசாங்கம் இராசயன உரத் தடை திட்டத்தை கொண்டுவந்தமை வெறும் அரசியல் திட்டமேயன்றி நடைமுறை சாத்தியமற்ற தான்தோன்றித் தனமான தீர்மானமhகும்.
சிறுபோக விவசாய உற்பத்திகளை ஆரம்பித்த விவசாய மக்கள் இந்த திட்டத்தினால் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதோடு பெரும் போகத்தை ஆரம்பிக்க அவர்கள் முன் இருப்பது வெறும் ஏமாற்றம் மாத்திரமே.
உரம் இல்லாமையால் வேளாண்மை விவசாயிகளுடை அறுவடைகள் தீர்க்கமான அளவு வீழச்சியடைந்துள்ளதோடு பெரும்பாலான விவசாயிகள் தங்களின் விவசாயத்தை கைவிடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- மரக்கறி விவசாயிகள் மற்றும் சிறு ஏற்றுமதித் துறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பெருந்தோட்டத்துறைகளான தேயிலை, தென்னை, இறப்பர் உற்பத்தியாளர்கள், பழவகை உற்பத்தியாளர்கள், சேனைப் பயிர்ச் செய்கையாளர்கள் என பல தரப்பட்டோர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- உற்பத்தியில் ஏற்படுகின்ற வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் தமது உற்பத்திகளை கைவிடுகின்ற நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி கண்டுள்ளமைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்.
மக்கள் நலன் இல்லாத பொது நலன் பேணாத இந்த அரசாங்கத்திடமிருந்து அதற்கு சாதகமான எந்தவொரு பதிலையும் எதிர்பார்க்க முடியாது.
- வியர்வையும் உழைப்பையும் உதிர்ந்து விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதோடு பொருளாதார மத்திய நிலையங்களில் விவசாயிகள் உதவியற்றவர்களாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரிசி மாபியாவை நிறைவு செய்வதாக கூறி கற்பனைப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து வெரும் ஊடக கண்காட்சியில் ஈடுபட்டுக் கொண்ருக்கின்றது.
- பொதுவாக விவசாயம் குறித்த பொதுவான அடிப்படை அறிவு அரசாங்கத்திற்கு இருந்தால் விவசாயிகளுக்கு தேவையான உள்ளீடுகளை குறித்த காலத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரமான விதைகள், தரமான உரம் என்பவற்றை உரிய காலத்தில் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். உற்பத்தித்திறனை மேம்படுத்துவதைத் தவிர விவசாயப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து மாற்றுத் திட்டங்கள் இல்லாததோடு அது குறித்து காணப்படுகின்ற சிக்கல்களை அறிந்துகொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் உற்பத்திகளுக்கு சாதாரண விலையைப் பெற்றுக்கொளடுப்பதற்கு தலையீடு செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் இது போன்ற நேர்மையான நியாயமான எந்தவொரு செயற்பாடும் அரச தரப்பில் காணப்படுவதாக இல்லை.
- இலங்கை பூராகவும் பரந்து காணப்படுகின்ற விவசாய திணைக்களங்கள், ஏற்றுமதி விவசாய உற்பத்தி திணைக்களங்கள், வனவள திணைக்களம், தேயிலை தென்னை இறப்பர் போன்ற உற்பத்திகளுக்காக நிறுவப்பட்டுள்ள திணைக்களங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் காணப்பட்டாலும் அவற்றிலிருந்து உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை.
உணவுப் பாதுகாப்பு முறை முன்னெப்போதையும் விட இன்று முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் உணவு உற்பத்தியில் முன்னிலையில் இருக்கின்ற விவசாயிகளை அரசாங்கம் முற்றிலுமாக முடக்கிவிட்டிருக்கின்றது.
- தேர்தலுக்கு முன்பு விவசாயிகள் மற்றும் விவசாயம் குறித்த கொள்கைத் திட்டத்தை அரசாங்கம் முற்றிலுமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு விவசாயத்தையும் விவசாயிகளையும் உயர்த்துவதை விட அரசாங்கம் தமது நண்பர்களை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
கொரோனா பேரழிவோடு போராடுகின்ற உலகின் பல்வேறு நாடுகள் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு முதலிடம் கொடுத்துள்ள நிலையில் இந்த அரசாங்கம் இந்த இரண்டையும் திட்டங்களில் இருந்து அகற்றி மண்ணில் புதைத்துள்ளனர்.
இந்த துக்கரமான சோகத்தை அப்பாவி பொது மக்களே அனுபவிக்க வேண்டியுள்ளதோடு அரசாங்கத்திற்கு எதுவும் இல்லை.
எனவே நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் சார்பாக விவசாயிகள் இந்தப் பிரச்சினைகளுக்கு உணர்திறனான உடனடித் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.