இந்தியாவில் குடும்ப தகராறில் தனது மனைவியை கண்ட துண்டமாக வெட்டி கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரேதேச மாநிலம் மீரூட் பகுதியை சேர்ந்தவர் தீபக் நிராலா. இவர் எழுத்தாளர் என்பதால் அடிக்கடி ரயிலில் பயணம் செய்வது வழக்கம். அப்போது அவருக்கு லக்னோ பகுதியில் உள்ள ஒரு வர்த்தக தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்த ரூபி குப்தா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அது நாளடைவில் இருவருக்குள் காதலாக மலர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி இருவருக்குள் 20 லட்சம் பண தொடர்பாக சண்டை ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் அளவுக்கு மீறியதால் ஆத்திரம் அடைந்த தீபக் தனது மனைவியை இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் ரூபிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். பின்பு செய்த கொலையை மறைக்க மனைவியை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் தூக்கி வீசியுள்ளார்.
அதன் பிறகு தன் மேல் சந்தேகம் வரக்கூடாது என்று சினிமா பாணியில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா சென்று வந்த பிறகு தனக்கு எதுவும் தெரியாதது போல் மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணையாக தீபக்கிடம் நடைபெற்றது. இதில் தீபக் நிராலா தன்னுடைய மனைவியை கொலை செய்து நாடகமாடுவதை பொலிஸ் கண்டுபிடித்தனர். இதையடுத்து பொலிசார் தீபக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.