சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ரெமோ’ படம் வசூல் சாதனை படைத்த நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார்.
இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சினேகா, தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னை தி.நகரில் உள்ள சேரி பகுதியில் எடுத்து முடித்துள்ள படக்குழு, 2வது கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளது.
முன்னதாக, `தனி ஒருவன்’ படத்தில் மருத்துவமனையில் நடக்கும் குற்றங்கள் உள்ளிட்ட சமூக விழிப்புணர்வு குறித்த முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் இந்த படத்திலும் சமூக விழிப்புணர்வு குறித்த தகவலை மோகன் ராஜா முயற்சி செய்துள்ளாராம். முன்னதாக விஜய்யின் `மதுர’ படத்தில் உணவுக் கலப்படம் குறித்த சமூக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் ஜோதிகாவின் `36 வயதினிலே’ படத்தில் உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு தெரிவித்திருந்த நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து மோகன் ராஜா இயக்கும் படத்மும் உணவுக் கலப்படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.