தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிவை கண்டு வருவதனால் வாடிக்கையாளர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் இன்றைய (செப்டம்பர் 18) விற்பனையில் சவரனுக்கு ரூ.16 வரை விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுவாக சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விற்பனையானது அதிகமாக காணப்படுவது வழக்கம். அந்த நாட்களில் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படும்.
ஆனால் கொரோனா 2 ஆம் அலைக்கு மத்தியில் மீண்டுமாக துவங்கியுள்ள தங்க நகைகளின் விற்பனை விலையானது தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அது போல இந்த காலத்தில் சுபகாரியங்கள் செய்பவர்களுக்கு தங்க நகைகளின் விலை சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்த தங்கத்தின் விலையானது, தற்போது இரண்டாவது வாரமாக சரிவை கண்டுள்ளது. குறிப்பாக நேற்றைய (செப்டம்பர் 17) விற்பனையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.300 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் (செப்டம்பர் 18) தங்கத்தின் விலை மீண்டுமாக சரிவை கண்டுள்ளது.
அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து, பல மாதங்கள் கழித்து ஒரு சவரன் நகை ரூ.34,952க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.2 மட்டும் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,369க்கு விற்பனையாகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.70 வரை சரிந்து ரூ.64.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.