இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். முதன்முறையாக 3 வேடத்தில் நடிக்கும் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா நடித்து வருகின்றனர். மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சிம்பு எழுதி பாடிய ‘டிரெண்ட் சாங்’கை படக்குழு வெளியிட்டது. சமூக வலைதளங்களில் டிரெண்ட்டான இந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.
இந்நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை தொடங்கிய படக்குழு `ஏஏஏ’ படத்தை தமிழ் புத்தாண்டில் (ஏப்ரல் 14) ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நாளிலேயே தனுஷ் தனது படத்தையும் வெளியிட முயற்சி செய்து வருகிறாராம். ராஜ்கிரன் நடிப்பில் `பவர் பாண்டி’ படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். இப்படத்தையும் தமிழ் புத்தாண்டு தினத்திலேயே வெளியிட தனுஷ் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.