யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த சிறுமிக்கு பணத்தாசை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாட் மாவட்டத்தில் கமலாபூர் உள்ளது. இந்த ஊரை சார்ந்த சிறுமி, அங்குள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பள்ளிக்கு சென்று வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இதன்போது, சிறுமி வரும் வழியில் இருந்த மற்றொரு சிறுமி யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வரும் நிலையில், சிறுமியிடம் யாசகம் கேட்டுள்ளார். அந்த சிறுமி தன்னிடம் பணம் இல்லை என்று கூற, நான் இளைஞர்களுடன் மலைப்பகுதிக்கு சென்று வந்தால், என்னிடம் அதிக பணம் கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி புரிதலுடன் செயல்பட்டு, யாசகம் பெரும் சிறுமிக்கு பாலியல் பலாத்கார கொடுமை நடந்துள்ளதை உறுதி செய்துள்ளார். இதனையடுத்து, சிறுமி தனது வீட்டிற்கு சென்று குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுமி கொடுத்த தகவலின் பேரில் யாசகம் பெரும் சிறுமியை கண்டறிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், சிறுமி யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வரும் நிலையில், அப்பகுதியை சார்ந்த காமுக இளைஞர்கள் அவரை மலைப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.
மேலும், என்ன செய்கிறார்கள் என்ற விபரம் கூட தெரியாமல் இருக்கும் சிறுமியிடம் தனது காம இச்சையை தீர்த்துவிட்டு, அவருக்கு பணம் கொடுத்ததும் அனுப்பியுள்ளனர். சம்பவத்தன்று சிறுமியிடம் பணம் இல்லாத காரணத்தால், பள்ளிக்கு சென்று வந்த சிறுமியிடம் பணம் கேட்டு விஷயத்தை கூறியுள்ளார். இதன் வாயிலாக உண்மை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குழந்தைகள் நலத்துறையினர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களின் விபரத்தை சேகரித்து, அவர்களை தேடி வருகின்றனர்.