Loading...
மட்டக்களப்பைச் சேர்ந்த தாய் ஒருவர் தற்போது சிறையில் உள்ள தனது மகனை விடுவிக்க உதவுமாறு வலியுறுத்தி அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் முன் கதறி அழுத காட்சி, காண்போரின் மனதை உருவ வைத்தது.
நேற்று, மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போது, அமைச்சர் நாமல் ராஜபக்சவை அந்த பெண் வரவேற்றார், அதன் பிறகு அவர் தனது மகனை விடுவிக்குமாறு அவரிடம் ஒரு மனுவை கொடுத்தார்.
Loading...
அமைச்சரிடம் அவர் தனது மகன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
நிகழ்வின் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜபக்ச, இதுபோன்ற கைதிகளை விடுவிப்பதற்கான செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்த விஷயத்தில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
Loading...