Loading...
தமது விருப்பத்திற்கு மாறாக மகளை திருமணம் செய்தவர் மீது, அசிட் தாக்குதல் நடத்திய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேடகம இலுகும்புர-பதுல்லகொல்ல பகுதியில் நேற்று முன்தினம் (22) இந்த சம்பவம் நடந்தது.
ஏற்கனவே திருமணமாகி, மனைவியை பிரிந்த ஒருவர், யுவதியொருவரை காதலித்துள்ளார். யுவதியின் பெற்றோர் அதற்கு உடன்படவில்லை. எனினும், யுவதியும், காதலனும் இரகசியமாக திருமணம் முடித்தனர்.
Loading...
நேற்று முன்தினம் இரவு யுவதியின் வீட்டுக்கு சென்ற காதலன், அவரை அழைத்து செல்ல முயன்ற போது, யுவதியின் தாயார், இளைஞன் மீது அசிட் வீசியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தற்போது மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அசிட் வீசிய பெண்ணை மேடகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Loading...