தமிழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் இரயில் நிலைய வாசலில் இளைஞர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முழு விபரம் வெளியாகியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர்சுவேதா. இவர் தந்தை பேருந்து ஓட்டுனராக உள்ளார். சுவேதா தாம்பரத்தில் இருக்கும் எம்.சி.சி கல்லூரியில் பட்டயபடிப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று தோழிகளுடன் வெளியே வந்த போது, அவருடைய ஆண்பர் எனப்படும் ராமச்சந்திரன் வழி மறித்து சுவேதாவிடம் பேசியுள்ளார்.
அப்போது நான் போன் செய்தால் ஏன் என் அழைப்பை எடுக்கமால் இருக்கிறார்? அதுமட்டுமின்றி உன் போன் பிசியாகாவே இருக்கிறதே என்று கேட்டுள்ளார். அதற்கு சுவேதா நான் தோழியிடம் பேசிக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.
இருப்பினும் அவர் கூறியதில் சந்தேகம் அடைந்த அவர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்மூடித்தனமாக குத்தினார்.
இதில் சுவேதா சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். அதன் பின் ராமச்சந்திரனும், கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
இது குறித்த தகவல் உடனே பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இறந்து கிடந்த சுவேதாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ராமச்சந்திரனை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து பொலிசார் அவனிடம் விசாரித்த போது, கடந்த 2019-ஆம் ஆண்டு சுவேதா தன்னுடைய விடுமுறை நாளை கழிப்பதற்காக நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள தனது பாட்டியின் வீட்டுக்கு ரெயிலில் சென்றுள்ளார்.
அப்போது தான் ராமச்சந்திரனின் அறிமுகம் கிடைத்துள்ளது. இரயிலில் இருவரும் பேசிக் கொண்ட போது, தன்னை போர்டு நிறுவன ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ராமச்சந்திரன், சுவேதாவுடன் நட்புடன் பழகியுள்ளார்.
எதேச்சையாக 3 முறைக்கும் மேலாக இதே போல ரெயிலில் சந்தித்ததால் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இடையில் வந்த கொரோனா ஊரடங்கால் ஊருக்கு செல்ல இயலாமலும், நேரில் சந்திக்க முடியாமலும் இருவரும் செல்போனிலேயே காதலை வளர்த்து வந்துள்ளனர். இரவு நேரங்களில் தினமும் ராமச்சந்திரனிடம் மணிக்கணக்கில் பேசிவந்த சுவேதா, சமீபநாட்களாக பேசுவதை குறைத்துக் கொண்டு வந்துள்ளார்.
ராமச்சத்திரன் அழைக்கும் நேரத்தில் சுவேதா வேறு காலில் பேசிக் கொண்டிருந்ததாகவும், தனது கால் வெயிட்டிங்கில் இருந்தாலும் ராமச்சந்திரன் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இது குறித்து சந்தேகத்துடன் ராமச்சந்திரன் கேட்டதால், சுவேதா அவருடன் பேசுவதையே முழுவதுமாக நிறுத்திக் கொண்டுள்ளார்.
இதனால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறி, சுவேதாவை நேரில் சந்திக்க அழைத்துள்ளான் ராமச்சந்திரன்.
ஆனால் சுவேதா சந்திக்க மறுத்துள்ளார். ஏற்கனவே, போர்டு நிறுவன ஊழியர்கள் வேலையிழப்பு போராட்டம் போன்ற மன உளைச்சலோடு இருந்த ராமச்சந்திரனுக்கு, காதலியும் தன்னை ஏமாற்றிவிட்டதாக உண்டான ஆத்திரத்தால் அவரை கொலை செய்யும் திட்டத்துடன் கத்தியை எடுத்துக் கொண்டு ராமச்சந்திரன் கல்லூரிக்கு சென்றுள்ளார்.
அங்கு நீண்ட நேரம் காத்திருந்து, சுவேதா கல்லூரியை விட்டு வந்ததும் அவரிடம் தகராறு செய்து கத்தியால் குத்திக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான்.
பொலிசார் தற்போது ராமச்சந்திரனை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட அவரது தோழிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை, நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த சுவாதி என்ற இளம்பெண் சரமாரியாக வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.
கொலைக் குற்றவாளியாக ராம்குமார் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். இச்சூழலில் மீண்டும் இதுபோல ஒரு கொலை சம்பவம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.