Loading...
எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இருவர் இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
அதனடிப்படையில், ஹிக்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையும், பென்தர, கோனகலபுர பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Loading...
இருவரும் வயல் வேலையில் ஈடுபடுபவர்கள் எனவும், அவ்வாறு வயலில் வேலை செய்கொண்டிருந்த போதே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர். இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எலிக்காய்ச்சலினால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Loading...