Loading...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், நேற்று திட்டமிட்டு கைதுசெய்யப்பட்டதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்ததான தெளிவுபடுத்தல்களை வழங்கினார்.
Loading...
நீதிமன்ற உத்தரவுடன் கட்சியின் செயலர் கைதுசெய்யப்பட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியது எனவும், ஆனால் அவ்வாறான உத்தரவுகள் இன்றி கைதுசெய்வது என்பது எமது உரிமைகளை பறிக்கும் விடயமாக அது அமையும் எனவும், யாழ். பொலிஸார் அடாவடித் தனமாக செயற்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...