பிரித்தானியா நாட்டில் உள்ள விமான நிலையங்களிலிருந்து புறப்படும் விமானங்கள் வானத்தில் ஒரே பாதையில் பல விமானங்களை இயக்கும் வகையில் வழிகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து செயலாளர் Chris Grayling அளித்துள்ள முக்கிய பேட்டியில், பிரித்தானியா நாட்டில் உள்ள விமான நிலையங்களிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு முக்கிய விமானங்கள் செல்கின்றன.
இங்கு முக்கிய மாற்றத்தை விரைவில் கொண்டுவரவுள்ளோம். அதன்படி ஒரே நேரத்தில் பல விமானங்களை ஒரே பாதையில் இயக்க திட்டம் தீட்டி வருகிறோம்.
இந்த விடயத்தை செய்ய செயற்கைகோள் ஊடுறுவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளோம் என Chris கூறியுள்ளார்.
இதன்மூலம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகள் மூலம் விமானங்கள் இடைவெளியை கட்டுப்படுத்தவும் மற்றும் தேவைப்பட்டால் விமானத்தை மெதுவாக இயக்க விமானிகளை அறிவுறுத்தவும், கண்காணிக்கவும் முடியும் என அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் விமான பயணம் வேகப்படுத்தப்படும் என்றும் விமானங்கள் தாமதமாவது தடுக்கப்படும் எனவும் தெரிகிறது.
ஆனால், விமான நிலையத்திலிருந்து ஒரே சமயத்தில் அதிகளவு விமானங்கள் கிளம்பினால் அந்த சத்ததால் விமான நிலையத்தின் அருகில் வசிப்பவர்கள் 725,000க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.