Loading...
பொதுவாக தொப்பை மற்றும் அதிகப்படியான உடல் எடையை குறைப்பதற்கு, பலரும் எலுமிச்சை பழத்தில் ஜூஸ் செய்துக் குடிப்பார்கள்.
எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால், அது நமது உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடலை சுத்தமாக்குகிறது.
Loading...
ஆனால் நீரில் எலுமிச்சை சாற்றினை அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், அது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
எலுமிச்சை ஜூஸை அதிகமாக குடித்தால் ஏற்படும் பக்க விளைவுகள்
- அமிலத்தன்மை அதிகம் இருக்கும் எலுமிச்சை பழத்தின் சாற்றினை நீரில் அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், அதில் உள்ள அதிகப்படியான அமிலம் நமது பற்களில் உள்ள எனாமலை அரித்து, பற்கள் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
- நீரில் அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்தால், நெஞ்செரிச்சல், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே அமிலம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
- எலுமிச்சையில் உள்ள அஸ்கார்பிக் ஆசிட்டானது, நமது சிறுநீரகத்தில் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, நமது உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் சோடியத்தை வெளியேற்றி, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
- எலுமிச்சை ஜூஸ் குடித்த பின் அதிக தாகம் மற்றும் வறட்சி ஏற்பட்டால், எலுமிச்சை சாற்றினை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஜூஸில் அதிக அளவில் எலுமிச்சை சாறு இருப்பதால், அது நமக்கு அதிகப்படியான வறட்சியை ஏற்படுத்துகிறது.
குறிப்பு
நீரில் எலுமிச்சை சாற்றினைக் கலக்கும் போது, ஒரு டம்ளர் தண்ணீரில் பாதி பழத்தின் எலுமிச்சை சாற்றினை மட்டும் கலந்து குடிப்பது மிகவும் நல்லது.
Loading...