இந்தியாவில் சுடுகாட்டுக்கு தண்ணீர் பிடிக்க சென்ற 9 வயது சிறுமி சீரழித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியான பூசாரி குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெற்கு டெல்லியின் ஓல்டு நன்கால் கிராம பகுதியைச் சேர்ந்தவர் அந்த 9 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் 1ஆம் திகதி அதிகாலை 5.30 மணி அளவில் தண்ணீர் பிடிப்பதற்காக அருகேயுள்ள சுடுகாட்டுக்கு சென்றாள்.
அங்குள்ள தண்ணீர் குளிரூட்டும் சாதனத்தில் இருந்து குளிர்ந்த நீர் பிடிப்பதற்காக சென்றிருக்கிறார் சிறுமி. வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் சுடுகாட்டில் பூசாரியாக வேலை பார்த்து வரும் ராதே ஷியாம் என்ற நபர் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், சிறுமியின் தாயிடம், சிறுமி இறந்து கிடப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு தண்ணீர் பிடிக்கக்கூடிய இடத்துக்கு அருகே சிறுமி உயிரிழந்த நிலையில் இருந்தார். மின்சாரம் தாக்கி சிறுமி பலியாகி விட்டதாக கூறிய பூசாரி மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக சிறுமியின் உடலை அங்கேயே தகனம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தனர். இதற்கு அந்த சிறுமியின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தார். உடனடியாக தகனம் செய்ய கூடாது என்று வலியுறுத்தினார்.
மேலும் அந்த சிறுமியின் கைகள் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் காயங்கள் இருப்பதை கண்ட அந்தத் தாய்க்கு சிறுமி சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. சிறுமி உதடு நீல வண்ணத்தில் காணப்பட்டது. இதை பார்த்து அந்த தாய் அழுது புரண்டார். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத அந்த நபர்கள் சிறுமியை அங்கேயே உடல் தகனம் செய்து விட்டனர்.
இந்த விவகாரம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பூசாரி ராதே ஷயாம், அவரின் நண்பர்களான குல்தீப் குமார், லஷ்மி நரைன், முகமது சலீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பூசாரி ஷயாம் தனது செல்போனில் 1300 ஆபாச இணையதளத்தில் சென்று ஆபாச படங்களை பார்த்துள்ளார் என்பதை அறிந்து பொலிசார் அதிர்ந்துள்ளனர், இந்த விவகாரம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் குற்றப்பத்திரிக்கையில், குற்றவாளி ஷியாம் சம்பவம் நடந்த நாளுக்கு முன் மைனர் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.