இந்த நவீன காலத்தில் பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது. குக்கரில் சமைப்பதால் வேலைகள் சீக்கிரமாக முடிந்து விடும் எண்ணத்தில் பலர் குக்கரில் சமைக்கின்றனர்.
அப்படி சமைக்கப்பட்ட உணவுகளில் ஒரு சில நன்மைகள் மட்டுமே இருக்கும் நிலையில் ஏராளமான தீமைகள் நிறைந்துள்ளது. அது போல ஒரு சில உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கவே கூடாது.
அவ்வாறு சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது உடல் ஆரோக்கியம் பாதிக்கும். சரி வாங்க எந்த உணவுகளை குக்கரில் சமைக்க கூடாது குறித்து தெரிந்து கொள்வோம்.
நீங்கள் பிரஷர் குக்கரில் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை சமைத்தால் அது உங்களின் உடல் ஆரோக்க்கியத்திற்கு கேடு விளைவிக்கும். உருளைக்கிழங்கு, பாஸ்தா ,அரிசி போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கும்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை உருவாக்குகிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.
ஆனால் குக்கரில் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை சமைக்கலாம். ஏனென்றால் அதில் ஏற்படும் வெப்பம் காரணமாக காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை வெளியே செல்லாமல் குக்கருக்கு உள்ளேயே இருப்பதால் ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்.
அரிசி, உருளைக்கிழங்கு போன்ற ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை நீங்கள் சமைக்கும் போது அது உங்களுக்கு புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கோழி, ஆட்டிறைச்சி போன்றவற்றை குக்கரில் சமைக்கலாம். ஏனெனில் பாத்திரங்களில் சமைக்கும்போது வேக நேரமெடுக்கும். பிரஷர் குக்கரில் சமைக்கும்போது விரைவில் வெந்துவிடும் மற்றும் எளிதில் ஜீரணம் ஆகிவிடும்.