Loading...
நமது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கும் பழங்களில் முதன்மையானது தான் ஆப்பிள்.
ஏனெனில் ஆப்பிள் பழத்தில் எண்ணற்ற சத்துக்களும் நன்மைகளும் அதிகமாக நிறைந்துள்ளது.
Loading...
ஆனால் அத்தகைய ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிளை ஜூஸ் போட்டு குடிப்பதால், அது நமது உடலுக்கு எவ்வளவு தீமையைத் தருகின்றது என்று உங்களுக்கு தெரியுமா?
ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
- ஆப்பிள் ஜூஸில் சர்க்கரை, கலோரிகள் போன்றவை அதிகம் உள்ளது. எனவே ஆப்பிள் பழத்தை ஜூஸ் செய்து அதிகமாக குடித்தால், அது நீரிழிவு மற்றும் பற்சிதைவு போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
- ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் அதிகம் இருப்பதால், இது நமது உடலில் பல ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, நமது இதயத்திற்கு பெரும் பாதிப்பையும் உண்டாக்குகிறது.
- ஆப்பிள் ஜூஸில் நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஆர்செனிக் என்னும் பொருள் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இதை அதிகமாக குடித்தால், நமது உடல் எடை அதிகரித்து, பல பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
- ஆப்பிள் ஜூஸில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அதனை அதிகம் நாம் உட்கொண்டால், அது நமது உடல் நலத்தை பாதித்து நிறைய பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
- ஆப்பிள் பழத்தை விட அதனை ஜூஸ் செய்து குடிக்கும் போது, அதில் உள்ள புரோட்டீன், ஊட்டச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் இல்லாமல் போய்விடுகிறது.
குறிப்பு
ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஆரோக்கியமான சத்துக்களை முழுமையாக பெறுவதற்கு, அதை ஜூஸ் செய்து குடிப்பதை தவிர்த்து பழமாக சாப்பிட வேண்டும்.
Loading...