குழந்தைகள் என்றாலே அழகு, குழந்தைகளை அழுத்தி தூக்க கூட மனது வராது. ஆனால், கோபால்பூர் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர். தனது குழந்தையின் சதையை அறுத்து தின்றுள்ளார். எப்படி தான் மனது வந்ததோ அந்த தாய்க்கு. சிலருக்கு இருக்கும் அதிகமான மனநோய் அல்லது போதை பழக்கம் இது போன்ற காரியங்களை செய்ய தூண்டுகிறது… யார் இவர்?
கொடூர மனம் படைத்த அந்த தாய் கோபால்பூர் எனும் இடத்தில் வசித்து வருபவர். இவருக்கு வயது 40. இவரது பெயர் பிரமிளா. சதையை அறுத்து தின்றார்! உறவினர் வீட்டுக்குள் நுழைந்த போது குழந்தை கத்தி அழுதுக் கொண்டிருந்தது.
அப்போது பிரமிளா தன் குழந்தையின் தலைப் பகுதியிலுள்ள சதையை அறுத்து தின்றுக் கொண்டிருந்தார். குழந்தை வலி தாங்காமல் கதறி அழுதுக் கொண்டிருந்தது.
உறவினர் காப்பாற்றினார்! அந்த கொடூர தாயின் உறவினர் தான் அந்த குழந்தையை காப்பற்றியுள்ளார். பக்கத்து வீட்டார் மற்றும் உறவினர் அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அடி, உதை! இந்த சம்பவத்தை அறிந்த ஊர் மக்கள் பிரமிளாவை இழுத்து சென்று மரத்தில் கட்டிவைத்து அடித்து, உதைத்து பிறகு போலீஸில் ஒப்படைத்து உள்ளனர். போலீசார் தான் பிரமிளாவை காப்பாற்றி காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
எதனால் இப்படி ஆனார் பிரமிளா? பிரமிளா இப்படி கொடூரமான தாயாக ஆனதற்கு காரணம் அவருக்கு இருந்த மிகுதியான போதை பொருள் தான். இவருக்கு குடி பழக்கம் அளவிற்கு அதிகமாக இருந்திருக்கிறது. என்ன இருந்தாலும் பிரமிளா செய்த காரியம் மனிதத்தன்மையற்ற செயல் ஆகும்.